அடேங்கப்பா... பிதாமகன் படத்திற்காக நடிகர் விக்ரம் வாங்கி சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
வருங்கால கணவரின் மடியில் காஜல் அகர்வால்! வைரலாகும் புகைப்படத்தால் வயிறெரியும் இளசுகள்!
வருங்கால கணவரின் மடியில் காஜல் அகர்வால்! வைரலாகும் புகைப்படத்தால் வயிறெரியும் இளசுகள்!

தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ள இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனை தொடர்ந்து காஜல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவருடன் வரும் அக்டோபர் 30 ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில்
காஜல் அகர்வால் அவரது வருங்கால கணவரின் மடியில் உட்கார்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.