வெளியான காஜல் அகர்வாலின் திருமணப் புகைப்படம்.! குவிந்துவரும் வாழ்த்துக்கள்.!

வெளியான காஜல் அகர்வாலின் திருமணப் புகைப்படம்.! குவிந்துவரும் வாழ்த்துக்கள்.!



kajal-agarwal-marriage-photos

தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக  அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர்  பொம்மலாட்டம், மோதிவிளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மெர்சல், ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, விவேகம் என பிரபல சினிமாக்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

காஜல் அகர்வால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து இந்திய அளவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். காஜல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

kajal agarwal
இந்தநிலையில், காஜல் அகர்வால் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 6 ஆம் தேதி சமூக வலைதளங்களில் தனது திருமணம் குறித்தும் காதலர் கெளதம் கிட்சிலு குறித்தும் முதன்முறையாக அறிவித்தார். அதனைத்தொடர்ந்து, காஜல் அகர்வாலுக்கு நேற்று மாலை திருமணம் மும்பை நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்தநிலையில் காஜல் அகர்வாலின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.