என்னது! நடிகை காஜலுக்கு இப்படியொரு நோயா! பாவம் இப்பவும் எப்படி கஷ்டப்படுறார் தெரியுமா? செம ஷாக்கான ரசிகர்கள்!!

என்னது! நடிகை காஜலுக்கு இப்படியொரு நோயா! பாவம் இப்பவும் எப்படி கஷ்டப்படுறார் தெரியுமா? செம ஷாக்கான ரசிகர்கள்!!


kajal-agarwal-affected-by-asthma

நடிகை காஜல் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு இன்ஹேலர் பயன்படுத்தி வருகிறார்.

தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக  அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர்  விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில்  கதாநாயகியாக நடித்துள்ளார்.  மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

அதனை தொடர்ந்து காஜல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருமாகும் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். மேலும் அவர்  தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்தும் அவர் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதல்முறையாக நடிகை காஜல் தனக்கு ஆஸ்துமா பிரச்சினை இருப்பது குறித்து கூறியுள்ளார். 

அவர் கூறியதாவது, 5  வயதாக இருக்கும்போது எனக்கு ஆஸ்துமா பிரச்சினை இருப்பது தெரியவந்தது. அதனால் அப்போதிலிருந்தே உணவு கட்டுபாட்டுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் வளர்ந்த பிறகும் ஆஸ்துமா பிரச்சினை சரியாகவில்லை. பயணம் செய்யும்போது, குளிர்காலம் வரும்போது,  தூசு, புகையை எதிர்கொள்ளும்போதும் இந்த பிரச்சினையை நான் சந்தித்தேன் . இதிலிருந்து விடுபட நான் இன்ஹேலர் பயன்படுத்த துவங்கினேன். எனக்கு நல்ல வித்தியாசம் தெரிந்தது. நம் நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது. ஆனால் அவர்கள் பொது இடங்களில் இன்ஹேலரை பயன்படுத்த வெட்கப்படுகிறார்கள். அந்த தயக்கத்தை நீக்க வேண்டும். ஆஸ்துமா குறித்தும், இன்ஹேலர் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.