இந்தியன் 2 படத்திற்காக காஜல் எடுத்த ரிஸ்க்! அதற்கு என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!! வைரலாகும் வீடியோ!!

இந்தியன் 2 படத்திற்காக காஜல் எடுத்த ரிஸ்க்! அதற்கு என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!! வைரலாகும் வீடியோ!!


kaajal-horse-riding-practise-for-indian2-movie

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2’. இதன் படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் துவங்கி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தியன் 2 படத்தில் நடிகை காஜல் நடிக்கிறார். 

துவக்கத்தில் படத்தில் ஒப்பந்தமாகி சில காட்சிகளில் நடித்திருந்த அவர் குழந்தை பிறந்ததால் படத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் பரவியது. ஆனால் அதனை காஜல் மறுத்தார். அவர் இந்தியன் 2 படத்திற்காக குதிரைப் பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம்.

அந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து காஜல், மீண்டும் நடிக்க வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என் உடல் முன்பு போல் இல்லை. அப்பொழுதெல்லாம் நாள் முழுதும் வேலை பார்த்தாலும் ஜிம்மிற்கு செல்வேன். ஆனால் குழந்தை பிறந்த பிறகு உடலில் மீண்டும் பழைய ஆற்றலை கொண்டு வருவது மிகவும் கடினமாக உள்ளது. உடல் ஒத்துழைக்கவில்லை.

உடல் மாறலாம். ஆனால் நமக்குள் இருக்கும் அடங்காத ஆர்வம் எப்போதும் மாறாதது. எதற்கு முக்கியத்துவம் அளித்து, கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். சினிமா துறை என் வீடு. அதில் இருப்பதை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இந்தியன் 2 படக்குழுவினருடன் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் எனக் கூறியுள்ளார்.