தனக்கான கல்லறையை இறப்பதுற்கு முன்பே கட்டிவைத்துள்ள நடிகர் ராஜேஷ்! காரணம் என்ன தெரியுமா?
ஓடிடியில் வெளியாகி, செம ஹிட்டான திரைப்படம்! விஜய் சேதுபதி இயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர்!

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவான திரைப்படம் க/பெ.ரணசிங்கம். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அவருடன் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் கொரோனா ஊரடங்கால் அக்டோபர் 2ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.மேலும் சமூக பிரச்சினையைப் பேசிய இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பலரும் படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இந்த வெற்றியால் பெரும் மகிழ்ச்சி அடைந்த க/பெ.ரணசிங்கம் படத்தயாரிப்பாளர் கொட்டப்பாடி ராஜேஷ் இயக்குனர் பெ.விருமாண்டிக்கு, கார் ஒன்றைப் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து விருமாண்டி மிகுந்த மகிழ்ச்சியுடன் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.