சினிமா

அடேங்கப்பா.! வீரதமிழச்சி ஜூலிக்கு இவ்வளவு பெரிய மனசா? தானாகவே என்ன காரியம் செய்துள்ளார் பார்த்தீர்களா!!

Summary:

julie give chance to young director for shortflims

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அறிமுகமானவர் ஜூலி. அதில் பெருமளவில் பிரபலமானதால் பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

 மேலும் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் ஓவியாவிற்கும், சில போட்டியாளர்களுக்கு எதிராகவும்,  புறம் பேசுவது போன்ற பல நடத்தைகளாலும் ரசிகர்களால் பெருமளவில் வெறுக்கப்பட்டார்.மேலும் மோசமான விமர்சனங்களையும் பெற்று வந்தார். இருப்பினும் அதனை பொருட்படுத்தாத ஜூலி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம்வந்தார். மேலும் ஒரு சில படங்களிலும் நடிக்க துவங்கினார்.

 மேலும் ஜூலி என்ன செய்தாலும் அதனை விமர்சனம் செய்வதற்கு ஒரு பெரும் கூட்டம் உள்ளது. இவ்வாறு அவர் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது கூட அனைவரும் ஓவியா ஓவியா என கத்தியுள்ளனர். மேலும் அப்பொழுது  ஜூலி  கோபமாக பேசியிருந்தார்.

இந்நிலையில் ஜூலி  அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒவ்வொரு படமும்  நம் வாழ்வின் பிரதி.ஒரு சிறிய முன்முயற்சியாக வலுவான கதைகளுடன் இயக்கத் துடிக்கும் சகோதர சகோதரிகள் வரவேற்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவ நான் இலவசமாக குறும்படங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன். எனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அணுகவும் என பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் ஆதரவளித்து பாராட்டினாலும்,  சிலர்  மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். 


Advertisement