ப்பா.. அழகில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி.! ரசிகர்களை கவர்ந்த போட்டோஷூட்!!



jayam-ravi-wife-aarthi-photoshoot-viral

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் எடிட்டர் மோகனின் மகனான ரவி. அதனைத் தொடர்ந்து அவர் ரசிகர்களால் ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டார். தொடர்ந்து பல சூப்பர்ஹிட் மாஸ் திரைப்படங்களில் நடித்த ஜெயம் ரவி தற்போது ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

ஆர்த்தியை கரம்பிடித்த ஜெயம் ரவி 

 

இளம்பெண்களின் கனவுநாயகனாக வலம் வந்த ஜெயம் ரவிக்கு கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி  என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஆரவ், அயான் என இரு மகன்கள் உள்ளனர். அவர்களில் ஆரவ் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த டிக் டிக் டிக் படத்தில் அவருக்கு மகனாகவே அசத்தலாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். மேலும் அவருக்கு விருதும் கிடைத்தது.

இதையும் படிங்க: பெண்களே.. கவனம்! அலட்சியமாக இருக்காதீங்க.! மருத்துவமனையில் இருந்து பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ.!

ஆர்த்தி போட்டோஷூட் 

 

ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் போன்றவற்றை பகிர்வார். இந்த நிலையில் அவர் தற்போது கருப்பு நிற புடவையில் வேற லெவலில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.

இதையும் படிங்க: பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூரா இது.! பள்ளி பருவத்தில் எப்படியிருந்துள்ளார் பார்த்தீங்களா.! வைரலாகும் புகைப்படம்!!