பெண்களே.. கவனம்! அலட்சியமாக இருக்காதீங்க.! மருத்துவமனையில் இருந்து பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ.!Actress  shamitha shetty shares her health issue video

பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷில்பா ஷெட்டி. அவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரது தங்கை ஷமிதா ஷெட்டி. அவரும் பாலிவுட் சினிமாவில் நடித்துள்ளார். அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அறுவை சிகிச்சை 

அவருக்கு கர்ப்பப்பையைச் சுற்றி வளர்ந்துள்ள எண்டோமெட்ரியஸ் திசு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், பெண்களே கவனமா இருங்கள். தயவுசெய்து எண்டோமெட்ரியஸ் என்பது என்ன? அது எப்படி ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை கூகுள் செய்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: "பழித்தாரும் வாழ்க.. பகைத்தாரும் வாழ்க.." கவிஞர் வைரமுத்து வெளியிட்ட பதிவு.! இணையத்தில் வைரல்!!

மருத்துவமனையிலிருந்து வீடியோ 

 எனக்கெல்லாம் எங்கே இருக்கப் போகிறது? என கவனக்குறைவாக அலட்சியமாக இருக்காதீங்க. அடிக்கடி உடல்நிலை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். 40% பெண்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனாலும் இதுகுறித்து இன்றும் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். கவனமாக இருந்தால் மருத்துவர்கள் வழிகாட்டுதலின்படி அறுவை சிகிச்சை செய்து சரிப்படுத்தலாம் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் சன் டிவியில் என்ட்ரி கொடுக்கும் காதலிக்க நேரமில்லை நாயகி.! அதுவும் எந்த டாப் சீரியலில் பார்த்தீங்களா!!