சினிமா

அடேங்கப்பா!! ஜெயம் ரவியின் மகனா இது? குட்டியாக இருந்துகிட்டு செய்ற வேலையை பார்த்தீங்களா!!

Summary:

jayam ravi second son video viral

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரவி. இப்படத்தை தொடர்ந்து அவர் ஏராளமான பகலா வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில் ஜெயம் ரவி தற்போது தனது 24 வது படமாக பிரதீப் ரங்கராஜன் இயக்கத்தில் உருவாகும் கோமாளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரு மகன்கள் உள்ளனர். இவர்களும் ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற டிக் டிக் டிக் படத்தில் அவருக்கு மகனாகவே நடித்திருந்தார்.

jayamravi family க்கான பட முடிவு
அவரது நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் முதல் படத்திலே சிறப்பாக நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திற்கான விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஜெயம் ரவி தற்போது தனது இரண்டாவது மகன் அயான்  செய்த சுட்டித்தனத்தை வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 அதனை கண்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சூப்பர் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement