"போதை மருந்து உபயோகித்து தடயத்தை அழிக்க முயன்ற ஜெயம் ரவி பட நடிகை!" மருத்துவ சோதனையில் அம்பலம்!

"போதை மருந்து உபயோகித்து தடயத்தை அழிக்க முயன்ற ஜெயம் ரவி பட நடிகை!" மருத்துவ சோதனையில் அம்பலம்!


Jayam ravi movie actress controversy issue

"வீரமதகரி" படத்தின் மூலம் அறிமுகமானவர் கன்னட நடிகை ராகினி திவேதி. இதை தொடர்ந்து கெம்பே கவுடா, ஷங்கர் ஐ பி எஸ், பங்காரி, ஷிவா, ஹோலி, நாயகா என பல கன்னடப் படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் ஜெயம் ரவியின் "நிமிர்ந்து நில்" படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

Kollywood

இதைத் தொடர்ந்து சமீபத்தில் சந்தானம் நடித்த "கிக்" படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் ராகினி திவேதி நடித்துள்ளார். இந்நிலையில் ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்கு பின் திரையுலகில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு போலீசார் நடத்திய விசாரணையில் ஹிந்தி நடிகை ரியா சர்க்கவர்த்தி மேலும் கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி ஆகியோரும் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டனர். 

Kollywood

இந்நிலையில் ராகினி திவேதி போதைப்பொருள் பயன்படுத்தினாரா என்று கண்டறியப்பட்ட சிறுநீர் பரிசோதனை செய்தபோது, ​​அவர் சிறுநீரில் குடிநீரைக் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. சிறுநீரில் தண்ணீர் கலந்தால் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியாது என்று ராகினி திவேதி நினைத்துள்ளார்.