எம்ஜிஆரின் இடத்தை நிரப்புவாரா தளபதி விஜய்! போஸ்டரால் பரபரப்பு! அதிரடியாக பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார்!jayakumar-answered-to-vijay-poster-issue

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய். இவருக்கென நாடு முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் தளபதி அரசியலுக்கு வரவேண்டும் எனவும் பலரும் கோரிக்கை எழுப்பியும் வருகின்றனர். 

 மேலும் அடிக்கடி அரசியலுக்கு அழைப்பு விடுத்து போஸ்டர் ஒட்டி பரபரப்பையும் ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில்  மதுரையில் விஜய் ரசிகர்கள் விஜய்யை உரிமைகுரல், இதயக்கனி, ரிச்சாகாரன் பட எம்ஜிஆர் போலவே சித்தரித்து, போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது பெரும் பரபரப்பை கிளப்பியது.

vijay

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய்யின் போஸ்டர் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வியெழுப்பிய நிலையில், அதற்கு அவர் கப்பலோட்டியவர்களெல்லாம் வஉசி கிடையாது, மீசை வைத்தவரெல்லாம் கட்டபொம்மன் கிடையாது. அதுபோல நடிகர் விஜய்யால் ஒருபோதும் எம்ஜிஆரின் இடத்தை நிரப்ப முடியாது என்று பதிலளித்துள்ளார்