தலயின் நேர்கொண்ட பார்வை! உச்சகட்ட எதிர்பார்ப்புடன் பிரபல நடிகையின் மகள் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

தலயின் நேர்கொண்ட பார்வை! உச்சகட்ட எதிர்பார்ப்புடன் பிரபல நடிகையின் மகள் என்ன கூறியுள்ளார் தெரியுமா?


janvi-tweet-about-nerkonda-parvai

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல அஜித் தனது 59 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சதுரங்க வேட்டை,தீரன்  போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறார்.மேலும் இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின்  கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். 

மேலும் இந்த படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆத்விக் ரவிச்சந்திரன் போன்ற பல நடிகர்கள் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

janvikapoorபாலிவுட் சினிமாவில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே  மாபெரும் வெற்றியை பெற்ற படம் 'பிங்க்'. இந்த   படத்தின் தமிழ் ரீமேக்கே தமிழில் தல 59 படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது . மேலும்  அதற்கு 'நேர்கொண்ட பார்வை' எனவும்  தலைப்பு வைக்கபட்டுள்ளது.

janvikapoor

இந்நிலையில் ஸ்ரீ தேவி - போனிகபூர் தம்பதியினரின் மகள் ஜான்வி இதுகுறித்து தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நேர்கொண்ட பார்வை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு  அப்பாவின் முதல் தமிழ் படம். காத்திருக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.