சினிமா

சினிமாவில் கால்பதிக்கும் நடிகை ஜனனி ஐயரின் தங்கை! அதுவம் யார் படத்தில் தெரியுமா?

Summary:

Janani iyer sister entering in to cinema

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் வெளியான தெகிடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஜனனி ஐயர். தெகிடி படத்திற்கு முன்னர் திரு திரு துரு துரு என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ளார் ஜனனி ஐயர். தெகிடி படத்திற்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார் ஜனனி ஐயர்.

அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஆரம்பம் முதல் ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஜனனி ஐயர் போட்டியின் இதுவரை சென்று வெளியேறினார்.

நடிகை ஜனனி ஐயருக்கு கீர்த்திகா என்ற ஒரு தங்கை உண்டு. தற்போது அவரும் தனது அக்கா போலவே சினிமாவில் களமிறங்கவுள்ளாராம். ஜனனி ஐயர் அடுத்ததாக தெகிடி நாயகன் அசோக் செல்வனுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் சந்தீப் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ஜனனி ஐயர் தங்கை கீர்த்திகா நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.


Advertisement