ஒரே படத்தில் கோடிகளில் சம்பளம் பெற்ற ஜெயிலர் பட வில்லன் .. எவ்வளவு தெரியுமா.?
ஒரே படத்தில் கோடிகளில் சம்பளம் பெற்ற ஜெயிலர் பட வில்லன் .. எவ்வளவு தெரியுமா.?

கோலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பல வெற்றி படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த் தனது நடிப்பு திறமையாலும், ஸ்டைலினாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.
80களிலிருந்து தற்போது வரை தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த், சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்திருந்தார். படத்தில் வில்லனாக விநாயகன் என்பவர் நடித்திருந்தார்.
இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. மேலும் சமீபத்தில் யூடியூப் சேனலில் பேட்டியில் கலந்து கொண்ட விநாயகம், அவர் 'ஜெயிலர்' படத்திற்காக பெற்ற சம்பளத்தை பற்றி பேசியிருந்தார்.
அவர் கூறியது, "நான் 'ஜெயிலர்' படத்திற்காக 35 லட்சம் சம்பளம் பெற்றேன் என்று சிலர் பேசுகிறார்கள். ஆனால் 35 லட்சத்தை விட மூன்று மடங்கு அதிகமாகப் பெற்றேன்.