சினிமா

விஷால், ஆர்யாவை தொடர்ந்து காதல் திருமணம் செய்யவிருக்கும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?

Summary:

jai talk about his marriage

தமிழ் சினிமாவில் பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன்  மூலம்  அறிமுகமானவர் நடிகர் ஜெய்.அதனை தொடர்ந்து அவர்  சென்னை-28 ,  சுப்ரமணியபுரம், சரோஜா, எங்கேயும் எப்போதும், ராஜாராணி என பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இந்நிலையில் வளர்ந்து வரும் நடிகரான ஜெய் நடிப்பில் பார்ட்டி, நீயா-2  ஆகிய படங்கள்  திரையில் வெளிவர தயாராகி இருக்கின்றன.அதனை தொடர்ந்து ஜெய்  மம்முட்டியுடன் இணைந்து  மலையாளத்தில் மதுரராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து ஜெய், அஞ்சலியை காதலிப்பதாகவும்,  இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் அதனை மறுத்த ஜெய்.  எனக்கும், அஞ்சலிக்கும் இடையே நல்ல நட்பு மட்டுமே உள்ளது. நாங்கள் காதலிக்கவில்லை என்று கூறினார்.

தொடர்புடைய படம்

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜெய்யிடம், திருமணம் எப்பொழுது என கேட்டதற்கு, நான் இன்னும் எனது திருமணம் பற்றி  யோசிக்கவே இல்லை. அப்படி திருமணம் செய்துகொள்வதாக இருந்தால், கண்டிப்பாக அது காதல் திருமணமாகத்தான் இருக்கும் என  ஜெய் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Advertisement