செய்ய தெரியாமல், ஜான்வி கபூர் செய்த செயல்.! கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.!
ஜான்வி வீடியோ வைரல்
நடிகை ஜான்வி கபூரின் சமீபத்திய செயல் ஒன்று, வீடியோவாக வைரலாகி ரசிகர்களிடம் கிண்டலை பெற்றுள்ளது.
நடிகை ஸ்ரீதேவி என்றால் தெரியாதவரே இருக்க மாட்டார்கள். அவ்வளவு புகழுக்கு ஆளானவர் தான் ஸ்ரீதேவி. அவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்ற நிலையில், அவர்களது ஒரு மகள்தான் நடிகை ஜான்வி கபூர்.
இதையும் படிங்க: 27 ஆண்டுகள் கழித்து அசத்தல்.. மலேசியா வாசுதேவனின் குரலில் வேட்டையன் பட பாடல்.!
கோலமாவு கோகிலாவாக ஜான்வி
இவர் ஒரு வாரிசு நடிகை என்பதால் படங்களில் நடிப்பதற்கு முன்பிருந்தே அவர் பலருக்கும் பரிட்சயமாக இருந்து வருகின்றார். தமிழில் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருந்த நிலையில் அதே படம் இந்தியில் டப் செய்யப்பட்ட நிலையில் அதில் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடித்து இருப்பார்.
இது நல்ல வரவேற்பை பெற்றது. சமூக வலைதளங்களில் ஜான்வி கபூர் மிகுந்த ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி தனது ஜிம் வீடியோக்கள், தான் செல்லும் இடங்களில் எடுக்கும் புகைப்படம். பீச் வீடியோக்கள், ஸ்விம்மிங் வீடியோக்கள் என்று வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் வைத்திருப்பார்.
ஆட்டோமேட்டிக் கதவு
அவர் ஒரு சொகுசு கார் வைத்திருக்கும் நிலையில் அதன் கதவு ஆட்டோமேட்டிக் மோடில் செயல்படக்கூடியது என்பதை மறந்த ஜான்வி கபூர் காரில் அமர்ந்தபடி அந்தக் கதவை மூட திரு திருவென விழித்துக் கொண்டு முயற்சி செய்கிறார். இந்த வேடிக்கையான வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
இதையும் படிங்க: நலிந்த கலைஞர்களின் கோரிக்கைகளுக்கு உதவ மறுக்கும் நடிகர் சங்கம்? - லொள்ளு சபா மனோகர் கண்ணீருடன் வேதனை.!