சினிமா

நிவர் புயலால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏற்பட்ட நிலைமை.. புத்திசாலித்தனமாக அவர் எடுத்த முடிவு.. வைரல் புகைப்படம்..

Summary:

சென்னையில் பெய்துவரும் கனமழையால் கட்டிக்கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் பெய்துவரும் கனமழையால் கட்டிக்கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நிவர் புயலாக மாறி இன்று நள்ளிரவு அல்லது நாளை நாளை பாண்டிச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. புயல் கரையை நெருங்கிவரும்நிலையில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

குறிப்பாக சென்னையில் பெய்துவரும் தொடர்மழையால் அங்கங்கே போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத் செல்வதற்காக சென்னை விமானநிலையம் செல்லவேண்டிய நிலையில் இருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கனமழையால் கார் மூலம் சென்னை விமான நிலையம் செல்ல முடியாத நிலையில் மெட்ரோ ரயில் மூலம் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

மெட்ரோ ரயிலில் பயணித்தவாறு சென்னை விமான நிலையம் செல்ல இதுதான் இப்போ சிறந்த வழி எனவும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement