பிரேக் அப் ஆனதை கொண்டாடிய இரவின் நிழல் பட நடிகை..Iravin nizhal movie actress celebrated her breakup

சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சாய் பிரியங்கா ருத். இவர் சன் தொலைக்காட்சியில் 'கேளடி கண்மணி' எனும் தொலைக்காட்சி சீரியலில் மூலம் அறிமுகமானார். இதன் பின்பு தமிழில் பல ரியாலிட்டி ஷோக்களில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார்.

priyanka

மேலும் சின்னத்திரையில் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் சாய் பிரியங்கா ரூத். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் நடிகையாக முதன் முதலில் 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார்.

இப்படத்திற்கு பின்பு ஆடாமல் ஜெயிச்சோமடா, மெட்ரோ, எனக்கு வாய்த்த அடிமைகள், கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், இரவின் நிழல் போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார் சாய் பிரியங்கா ரூத்.

priyanka

இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வரும் சாய் பிரியங்கா தற்போது தனக்கு பிரேக்கப் ஆனதை நடனமாடி கொண்டாடுவதாக வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.