"அந்த பொண்ண கைய புடிச்சு இழுத்தியா என்ன கைய புடிச்சு இழுத்தியா" இந்த காமெடியின் படபிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள்..
"அந்த பொண்ண கைய புடிச்சு இழுத்தியா என்ன கைய புடிச்சு இழுத்தியா" இந்த காமெடியின் படபிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள்..

தமிழ் சினிமாவில் காமெடியின் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. இவரின் நகைச்சுவைக்காகவே பல திரைப்படங்கள் வெற்றியடைந்திருக்கின்றன. தயாரிப்பாளர்களும், இயக்குனரும் படத்தில் இவரது நகைச்சுவை இருக்க வேண்டும் என்பதற்காகவே கால் சீட்டுக்காக காத்திருந்த காலம் உண்டு.
மேலும், தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் நடிகர் வடிவேலு தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கிறது. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற நிலையில், 1999 ஆம் வருடம் 'நேசம் புதிது' என்னும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள என்ன கைய புடிச்சு இழுத்தியா இந்த காமெடியின் பின்னால் இருக்கும் சுவாரசியமான சம்பவங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. இதெல்லாம் ஒரு காமெடி காட்சியா? இது வேண்டாம் என்று நடிகர் வடிவேலு மற்றும் இந்த காட்சியில் நடித்திருக்கும் சங்கிலி முருகன் போன்றோர் கூறியிருக்கின்றனர்.
ஆனால் இந்த காமெடி பெரிய ஹிட்டாகும் என்று இயக்குனர் கூறவே இக்காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது. திரையில் வெளிவந்த பின் இந்த காமெடி காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது. இதனால் இயக்குனரை வடிவேலு பாராட்டினாராம்.