சினிமா விளையாட்டு

பிரபல இந்திய கிரிக்கெட் வீரருக்கு திடீர் ஊக்க மருந்து சோதனை! அதிர்ச்சியில் வீரர்கள்!

Summary:

Indian cricket player pumrah under test in world cup

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் கனவோடு இங்கிலாந்து புறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நடந்த பயிற்சி ஆட்டத்தில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

இரண்டாவது போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை வீழ்த்தி அபரா வெற்றி பெற்றது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இதற்கு முன்னர் நடந்த இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இதனால் நாளைய ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி நிச்சயம் வெறியுடன் விளையாடும். இந்நிலையில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா திடீரென ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

முதலில் சிறுநீர் சோதனையும், அடுத்ததாக இரத்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது. பரிசோதனை முடிவுகள் குறித்து எந்த தகவல்களும் இதுவரை வெளிவராத நிலையில் இந்த திடீர் சோதனை இந்திய அணி வீரர்கள் உட்பட ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Advertisement