கமலஹாசனுக்கு வில்லனாக மாறிய எஸ் ஜே சூர்யா.. என்ன நடந்தது தெரியுமா.?

கமலஹாசனுக்கு வில்லனாக மாறிய எஸ் ஜே சூர்யா.. என்ன நடந்தது தெரியுமா.?



Indian 2 villan sj surya

கோலிவுட் திரையுலகில் சிவாஜிக்கு பின்பு  நடிப்பதில் வல்லவராக இருப்பவர் கமலஹாசன். இவர் தமிழில் பல படங்களில் வித்தியாசமான வேடங்களில், மாறுபட்ட திரைக்கதைகளை தமிழ் ரசிகர்களுக்கு அளித்து வருகிறார்.

surya

சமீபத்தில் கமலஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. தற்போது கமலஹாசன் சங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் 'இந்தியன்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 'இந்தியன் 2' திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தற்போது படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முக்கியமான நடிகர் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது.

surya

இந்தியன் 2 திரைப்படத்தில் கமலஹாசனுக்கு  எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகிருக்கிறது. மேலும் எஸ் ஜே சூர்யா மாநாடு, மெர்சல் போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.