மீண்டும் துவங்கிய இந்தியன் 2 ஷூட்டிங்! மிரட்டலான லுக்கில் உலகநாயகன் ! அவரே பகிர்ந்த வீடியோ இதோ!!

மீண்டும் துவங்கிய இந்தியன் 2 ஷூட்டிங்! மிரட்டலான லுக்கில் உலகநாயகன் ! அவரே பகிர்ந்த வீடியோ இதோ!!


indian-2-movie-shooting-started

கடந்த 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டான திரைப்படம் இந்தியன். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டானது.

இந்நிலையில் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றது.  ஆனால் ஒரு சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. 

இந்தநிலையில் சில காலங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் செப்டம்பர் முதல் 'இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்திருந்தார். அதன்படி இன்று இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இந்த நிலையில் அதனைப் பகிர்ந்து நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், சூட்டிங் ஸ்பாட்டில்  இயக்குனர் ஷங்கருடன் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.