சினிமா Covid-19

பசியால் வாடும் ஏழை மக்களுக்கு தன் கையால் இமான் அண்ணாச்சி செய்த பேருதவி.! குவியும் வாழ்த்துக்கள்.!

Summary:

Imman annachi gave biriyani during lock down

கொரோனா ஊரடங்கு காரணமாக உணவில்லாமல் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு பிரபல நகைச்சுவை நடிகரான இமான் அண்ணாச்சி தானே பிரியாணி சமைத்துக் கொடுக்கும் வீடியோ வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாட கூலி வேலைக்கு செல்பவர்கள், தெருவோரத்தில் வசிக்கும் மக்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர்.

தன்னார்வலர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இணைந்த கைகள் அறக்கட்டளையும், கலாம் அறக்கட்டளையும் இணைந்து தினமும் 300 பேருக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் தன்னை இணைத்துக் கொண்ட நடிகர் இமான் அண்ணாச்சி அவர்கள், தானே பிரியாணி செய்து, அதை சென்னையில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு வழங்கி வருகிறார். அதில் இமான் அண்ணாச்சி, பிரியாணியை, அண்டாவில் வைத்து கிளறும் காட்சிகளும், பிறகு அவற்றை, முதியோருக்கு வழங்கும் காட்சிகளும் புகைப்படமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.Advertisement