இதெல்லவா சகோதர பாசம்.! ராஜுவிற்கு இமான் அண்ணாச்சி கொடுத்த வேற லெவல் சர்ப்ரைஸ்! நெகிழ்ந்த ரசிகர்கள்!!

இதெல்லவா சகோதர பாசம்.! ராஜுவிற்கு இமான் அண்ணாச்சி கொடுத்த வேற லெவல் சர்ப்ரைஸ்! நெகிழ்ந்த ரசிகர்கள்!!


Iman annachi surprise to title winner raju

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 5வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு சண்டை, வாக்குவாதங்கள், அன்பு என விறுவிறுப்பாக சென்ற நிலையில் கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது.

இந்த சீசனில் பாவனி, ராஜு, பிரியங்கா, அமீர், நிரூப் ஆகியோர் இறுதிக் கட்டத்திற்கு சென்ற நிலையில் ராஜு பிக்பாஸ் டைட்டிலை வென்றார். இந்த நிலையில் ராஜீவுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அண்ணனைப் போல மிகவும் நெருங்கி பழகி வந்த இமான் அண்ணாச்சி பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அவர் ராஜுவை தனது வீட்டிற்கு அழைத்து கேக் வெட்டி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அண்ணாச்சி, வீட்டு பூந்தோட்டத்தில் முளைத்த செடியிலிருந்து கொடியின் பூக்கள் வரை ஒன்றில் இரு வண்ணம் அண்ணனும் தம்பியும் போல..! அண்ணனுடன் பிறந்த தம்பிகளுக்கு மட்டும் தான் தெரியும் அண்ணனுக்கு இன்னொரு பெயர் அப்பா என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.