என்னவொரு பாசம்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அண்ணாச்சி யாரை சந்தித்துள்ளார் பார்த்தீங்களா! தீயாய் பரவும் வீடியோ!!

என்னவொரு பாசம்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அண்ணாச்சி யாரை சந்தித்துள்ளார் பார்த்தீங்களா! தீயாய் பரவும் வீடியோ!!


Iman annachi meet iykki berry

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களை பெருமளவில் கவர்ந்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5.  உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்  ஒவ்வொரு நாளும் வித்தியாசமான டாஸ்க்குகளால் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டுள்ளது. 

மேலும் போட்டியாளர்களும் பிக்பாஸ் கொடுக்கும் ரணகளமாக டாஸ்க்குகளையும் வெறித்தனமாக விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் வீட்டில் சண்டை, வாக்குவாதங்கள், சமாதானம் என அனைத்தும் அரங்கேறி வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் இமான் அண்ணாச்சி குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து கமல் இமான் அண்ணாச்சியை தனது படத்தில் நடிக்க வைப்பதாக கூறினார். இந்த நிலையில்  பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இமான் அண்ணாச்சியை, ஐக்கி பெர்ரி அவரது வீட்டில் சென்று சந்தித்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே  இருவருக்குமிடையே பாசமான உறவு காணப்பட்டது. இந்நிலையில் ஐக்கி பெர்ரி மற்றும் அண்ணாச்சி இருவரும் ஒன்றாக பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.