சினிமா

அவரோட காதலனை விட நான்தான் அந்தப் பெண்ணை அதிகமாக நேசித்தேன்! இளையராஜா கூறியது யாரை தெரியுமா?

Summary:

ilayaraja talk about laila

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், இசைஞானி இளையராஜாவின் 75 பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பாராட்டு விழாவும், பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் அவை நேற்றும், இன்றும் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு ஆடி,பாடி விழாவை சிறப்பித்தனர்.மேலும்  கு பல வெற்றிப்படங்களில் நடித்த பிரபலங்களும், இளையராஜாவின் இசைப் பயணம் குறித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் அவரிடம் சில கேள்விகளையும் எழுப்பினர்.

ilayaraja show ymca க்கான பட முடிவு

இந்நிலையில் தனது பல படங்களுக்கு இசையமைத்த இளையராஜா பற்றி நடிகை ராதா தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். மேலும் அப்பொழுது அவர் இளையராஜாவிடம் கேள்வி ஒன்றையும் எழுப்பினார். அதாவது, ராஜா சார் நீங்க பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். மேலும் நீங்கள் இசையமைத்த பாடல் அனைத்தும் அதில் நடிக்கும் நடிகைகளுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். நீங்கள் எதாவது நடிகையை ரசித்தது உண்டா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு இளையராஜா, எனக்கு மூன்றாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே  லைலாவை மிகவும் பிடிக்கும்.மஜ்னுவை விட அவரை நான் அதிகம் நேசித்தேன் என கூறினார்.


Advertisement