இளமை இதோ.. இதோ! செம கலக்கலாக புத்தாண்டு வாழ்த்து கூறிய இசைஞானி.! வைரலாகும் வீடியோ!!

இளமை இதோ.. இதோ! செம கலக்கலாக புத்தாண்டு வாழ்த்து கூறிய இசைஞானி.! வைரலாகும் வீடியோ!!


ilaiyaraja-wishes-for-new-year

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களுக்கு இசைமைத்து இசைஞானியாக கொடிகட்டி பறப்பவர் இளையராஜா. அவர் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை அனைவராலும் விரும்பக்கூடிய முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 

இவர் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் 2022 ஆம் வருடத்தை வரவேற்கும் வகையில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் காரில் பயணித்தபடியே தனது ரசிகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது குரலிலேயே இளமை இதோ இதோ.. இனிமை இதோ இதோ.. என்ற பாடலையும் பாடியுள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில் பல பிரபலங்களும் அதற்கு ரீட்வீட் செய்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.