இந்தியா காதல் – உறவுகள்

நண்பருடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக்கட்டிய செய்திவாசிப்பாளர்.! அம்பலமான பகீர் உண்மைகள்!!

Summary:

Husband killed wife for illegal affair

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜிதேஷ் மிஸ்ரா. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திவ்யா என்ற பெண்ணுடன் கடந்த சில மாதங்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.  

 இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திவ்யா தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார்.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அஜிதேஷ் தான்தான் மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். 

 பின்னர் இதுகுறித்து அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, நான் என்னுடன் பணிபுரியும் பாவனா ஆர்யா என்ற பெண்ணை காதலித்து வந்தேன். இந்த விவகாரம் தெரிய வந்தநிலையில் எனக்கும் திவ்யாவுக்கும் அடிக்கடி சண்டை வந்தது. இந்நிலையில் நான் அவரை கொலை செய்ய எனது நண்பன் அகில் குமாருடன் சேர்ந்து திட்டமிட்டேன். இதனைத் தொடர்ந்து என்னை பார்ப்பது போல எனது வீட்டிற்கு வந்த அகில் அங்கிருந்த பூச்சட்டியால் திவ்யாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். 

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து திவ்யா உயிரிழந்துள்ளார். மேலும் அகில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அஜிதேஷ்,  பாவனா ஆர்யா, மற்றும் அவரது நண்பர் அகில் குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 


 


Advertisement