அட்டகாசமான வாத்தி படத்தின் அப்டேட் - ரசிகர்களை உற்சாகப்படுத்திய பட குழு!

அட்டகாசமான வாத்தி படத்தின் அப்டேட் - ரசிகர்களை உற்சாகப்படுத்திய பட குழு!


hot-update-of-vathi-movie---the-team-excited-the-fans

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வாத்தி. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் வைத்து மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்தத் திரைப்படம் வருகின்ற 17ஆம் தேதி  வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து படத்தின்  ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் பட குழுவினர்  வாத்தி படத்தின் ட்ரெய்லர் பற்றிய அறிவிப்பினை  அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு  ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் தனுஷ். இவரை கதாநாயகனாக வைத்து  தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான வெங்கி அட்லூரி  இயக்கியிருக்கும் படம்  வாத்தி. இந்தத் திரைப்படத்தினை சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபார் சினிமாஸ் மற்றும் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் ஆகிய  நிறுவனங்கள் தயாரித்து இருக்கின்றன. இந்தப் படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில்  வெளியாக இருக்கும் தனுஷின் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush

இந்தத் திரைப்படத்தில் சம்யுக்தா மேனன் தனுசுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்  மேலும் இவர்களுடன் சமுத்திரக்கனி, ராஜேந்திரன், சாய்குமார், ஆடுகளம் நரேன், தனிகெல்லா பரணி, ஹைபர் ஆதி, தோட்டாபல்லி மது, இளவரசு, ஹரீஷ் பேரடி, ப்ரவீனா  ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் படப்பிடிப்புகள் முடிவடைந்து  போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும்  நிறைவு பெற்ற நிலையில்  இந்தத் திரைப்படம் வருகின்ற 17ஆம் தேதி  வெளியாகும் என படக் குழு  அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இதனை முன்னிட்டு  படத்தின் இசை வெளியீட்டு விழாவை  கடந்த நான்காம் தேதி  சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மிகப்பிரமாண்டமாக  நடத்தியது பட குழு. இந்த நிகழ்வில் தமிழ் சினிமாவின்  முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால்  இத்திரைப்படத்திற்கான ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என  ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

Dhanush

இவ்வேளையில்  படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று  அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. வாத்தி படத்தின் ட்ரைலரானது  வருகின்ற எட்டாம் தேதி வெளியாக இருப்பதாக  பட குழு  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களிடையே  எதிர்பார்ப்பையும்  மகிழ்ச்சியையும் அதிகரித்துள்ளது.̓