சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
இறந்த ஹரிகிருஷ்ணாவின் உடலுடன் புண்ணகையோடு செல்ஃபி எடுத்த மருத்துவமணை ஊழியர்கள்; புகைப்படம் உள்ளே
முன்னாள் ஆந்திரா முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகனும் தெலுங்கு நடிகர் ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்த செய்தி நாம் அறிந்தது தான்.
அணைவரும் சோகத்தில் இருந்த அந்த சமயத்தில் அவரது சடலத்துடன் மருத்துவமனை ஊழியர்கள் புண்ணகையுடன் எடுத்துக் கொண்ட செல்பி வைரலாக பரவி வருவதால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
.jpeg)
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகனும் ஜூனியர் என்டிஆரின் தந்தையுமான நடிகர் மற்றும் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த ஹரிகிரிஷ்ணா தனது ரசிகர் ஒருவரின் திருமணத்துக்காக,சென்று திரும்பியபோது நல்கொண்டா பகுதியில் விபத்தில் சிக்கினார் .
விபத்தில் காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் ரத்த காயத்துடன், மயக்கமுற்ற நிலையில் மருத்துவமனையில் சாலையில் கிடந்தார்.
அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் சிகிச்சை பலனின்றி ஹரிகிருஷ்ணா பரிதாபமாக உயிரிழந்தார.
இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது சடலத்துடன் மருத்துவமனையை சேர்ந்த வார்டு பாய் மற்றும் நர்சுகள் உட்பட நான்கு பேர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.மேலும் விளம்பரத்திற்காக இவ்வளவு மோசமாக நடந்துகொண்ட ஊழியர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அந்த நான்கு பேரையும் வேலையில் இருந்து நீக்கியது.மேலும் ஊழியர்களின் செயலுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.