நீங்கதான் காப்பாற்றுகிறீர்கள்! நடிகர் விஜய்யை புகழ்ந்து தள்ளிய பிரபல ஹாலிவுட் நடிகர்! ஏன் தெரியுமா?

நீங்கதான் காப்பாற்றுகிறீர்கள்! நடிகர் விஜய்யை புகழ்ந்து தள்ளிய பிரபல ஹாலிவுட் நடிகர்! ஏன் தெரியுமா?



holliywood-actor-wish-vijay-for-planting-tree

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பர் நடிகர் விஜய். இவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.  இந்நிலையில் பிகில் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்
மாநகரம், கைதி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் ஒரு பேராசிரியராக நடித்திருக்கிறார். 

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுடன் சாந்தனு, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்த நிலையில் படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்பின் கடைசி நாள்  நெய்வேலியில் நடிகர் விஜய், மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் மரம் நட்டு வைத்துள்ளனர் . அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் பிரிடேட்டர் மற்றும் எக்ஸ்மேன் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த நடிகரும், ஹாலிவுட் இயக்குனருமான பில் டியூக், பூமியை காப்பாற்றுகிறீர்கள் வாழ்த்துக்கள் என நடிகர் விஜயை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.