சினிமா

அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதிப்பு உறுதி! பிரபல நடிகை குடும்பத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

Summary:

Hindi actress whole family admit in hospital for corono affect

ரெமோ டிசோசா இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த ஏபிசிடி என்ற படத்தில் நடித்தவர் பிரபல நடிகை மோகனா குமாரி சிங்.  இவர் ஏராளமான இந்தி சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் நடிகை மோகனா குமாரி தனது குடும்பத்துடன் டேராடூனில் வசித்து வந்தார்.

இந்நிலையில் அவருக்கு  தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டநிலையில் சிகிச்சைக்காக குடும்பத்தினருடன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள் ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, 
நான் குடும்பத்துடன் டேராடூனில் வசித்து வருகிறேன். இந்நிலையில் எனது மாமியாருக்கு சமீபத்தில் காய்ச்சல் அறிகுறி இருந்தது. அதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தோம். ஆனால் அவருக்கு கொரோனா இல்லை என மருத்துவர்கள் கூறினர். அதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால், காய்ச்சல் கொஞ்சம் கூட குறையவே இல்லை. மேலும் டேராடூனில் மழை, குளிர் என வானிலையும் மாறிமாறி வந்தது.

இதனால் நாங்கள் அனைவரும் குடும்பத்தோடு கொரோனா பரிசோதனை செய்தோம். அதில் எங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து எங்கள் குடும்பத்தினர் ஐந்து பேரும் ரிஷிகேஷில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறோம். எங்களுக்கு முதலில் எந்த கொரோனா அறிகுறியும் இல்லை எனக் கூறியுள்ளார்.

இவ்வாறு தொலைக்காட்சி நடிகை ஒருவர் கொரோனோவால்  பாதிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement