ஹிப்ஹாப் ஆதியின் 'நட்பே துணை' செம மாஸ், டுவிட்டரில் பாராட்டு மழை பொழியும் ரசிகர்கள்.!



hib-pab-aathi---new-movie---natbe-thunai---today-releas

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி மீசையமுறுக்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தவர் ஹிப்ஹாப் தமிழா. 

சுந்தர்சி தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா இயக்கத்தில் உருவான மீசையமுறுக்கு படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதில் இடம்பெற்ற பாடல்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.

natbe thunai

இந்நிலையில் மீண்டும் சுந்தர்சியின் கூட்டணியில் இணைந்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா. ‘நட்பே துணை’ என்று பெயரிடப்பட்ட இந்த படத்தை சுந்தர்சியின் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய பார்த்திபன் தேசிங்கு, இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார்.



 

ஹிப்ஹாப் தமிழா உடன் இணைந்து அனகா ஹீரோயினாகவும், கரு.பழனியப்பன், விக்னேஷ்காந்த், பாண்டியராஜன், கெளசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ஆதி இசையமைத்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஒரு ஹாக்கி விளையாட்டு வீரராக இந்த படத்தில் நடித்திருக்கிறார்.