தமிழகம் சினிமா

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்! அடேங்கப்பா.. யார் யார் எத்தனை கோடி வாங்குறாங்க தெரியுமா?

Summary:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் பலரும் தற்போது தங்களது சம்பளத்தை உயர்த்திக் க

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் பலரும் தற்போது தங்களது சம்பளத்தை உயர்த்திக் கொண்டே வருகின்றனர். தங்களது மார்கெட் சற்று உயர்ந்தாலும் அதற்கேற்றார்போல் தங்களது சம்பளத்தையும் பலமடங்கு உயர்த்திகொள்கின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் இணையங்களில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.4 கோடி முதல் 5 கோடி வரை சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் சமந்தா ஒரு படத்துக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் பெறுகிறாராம்.

மேலும் அனுஷ்கா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ரூ.3 கோடி  கேட்கின்றனராம். கீர்த்திசுரேஷ் கைவசம் தற்போது அண்ணாத்த, சாணிகாகிதம் மற்றும் மலையாளம், தெலுங்கில் சில படங்கள் உள்ளனவாம். அவர்களை தொடர்ந்து கிட்டத்தட்ட 7 படங்களை தன் கைவசம் கொண்டிருக்கும் காஜல் அகர்வால் ஒரு படத்துக்கு ரூபாய் 2 கோடி சம்பளம் கேட்பதாகவும், திரிஷா 2 கோடி, சுருதிஹாசன், தமன்னா ஆகியோர் ரூ.1 கோடியே 50 லட்சம் சம்பளம் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement