அவருக்காக தன் சினிமா வாழ்க்கையை தியாகம் செய்த பிரபல நடிகை,! பயில்வான் ரங்கநாதன் போட்ட குண்டு.!

அவருக்காக தன் சினிமா வாழ்க்கையை தியாகம் செய்த பிரபல நடிகை,! பயில்வான் ரங்கநாதன் போட்ட குண்டு.!


heroine-requested-mohan-to-marry-her

ஒரு காலத்தில் நடிகர் மோகன் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வந்தார். மூடுபனி என்ற திரைப்படத்தின் மூலமாக, தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார்.

இவருடைய நடிப்பு அந்த காலகட்டத்தில் அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டது. ராதிகா, நதியா, ராதா உள்ளிட்ட அப்போதைய முன்னணி நடிகைகளோடு பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதோடு மெல்ல திறந்தது கதவு, பாடு நிலாவே, மௌன ராகம் உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

Bailvan Ranganathan

ஒரு காலகட்டத்தில் சினிமாவில் நடித்தால் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன், என தெரிவித்திருந்த மோகன், தற்போது விஜயின் 68வது திரைப்படத்தில் வில்லனாக களமிறங்கியிருக்கின்றார். கதாநாயகனாகவே நடித்து வந்த மோகன், தற்போது வில்லனாக அவதாரம் எடுத்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் மோகனின் தொடக்க கால வாழ்க்கை தொடர்பாக சினிமா விமர்சகரும்,  நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தற்போது சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது 80களில் முன்னணி நடிகையாக இருந்த ஒரு 2 எழுத்து நடிகை மோகனை மிகவும் காதலித்ததாக தெரிவித்திருக்கிறார்.

Bailvan Ranganathan

மேலும் அந்த நடிகை மோகனுக்காக சினிமாவை தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாக கூறியிருந்தார். எனவும், அதோடு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் மோகனை வற்புறுத்தியதாகவும் கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன், ஆனாலும் அந்த நடிகையின் மீது மோகனுக்கு எந்த விதமான காதலுமில்லை என்றும் கூறியிருக்கிறார். அதோடு அந்த நடிகைக்கு தற்போது திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

ஆனால் பயில்வான் ரங்கநாதன் கூறியதை வைத்து பார்த்தால், அந்த நடிகை ராதாவாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் மேலும் சிலரோ, வேறு நடிகையாக இருக்கலாம் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.