என்னுடைய திரை வாழ்க்கையில் நான் பணிபுரிந்ததிலேயே மிகச் சிறந்த இயக்குனர் இவர்தான்.! மனம் திறந்த பிரபாஸ்.!

என்னுடைய திரை வாழ்க்கையில் நான் பணிபுரிந்ததிலேயே மிகச் சிறந்த இயக்குனர் இவர்தான்.! மனம் திறந்த பிரபாஸ்.!



HeisthebestdirectorIhaveeverworkedwithinmycareerOpenmindedPrabhas

கே.ஜி.எப் திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அடுத்தபடியாக தயாரித்த திரைப்படம் தான் சலாம் பாகுபலி திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்த பிரபாஸ் இந்த திரைப்படத்திலும் கதாநாயகனாக களம் இறங்கி இருக்கிறார் இந்த திரைப்படத்தை கே ஜி எஃப் திரைப்படத்தை இயக்கிய நெயில் பிரசாந்த் இயக்கி இருக்கின்றார்.

இந்தத் திரைப்படத்தில் நடிகர் பிரபாஸுடன் ஜெகபதி பாபு பிரித்விராஜ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர் இந்த திரைப்படம் வரும் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தின் கதாநாயகன் பிரபாஸ் இந்த திரைப்படம் தொடர்பாக தற்போது பேட்டி அளித்திருக்கிறார்.

Branhas

அந்த பேட்டியின்போது, "கதாபாத்திரங்களுக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான போராட்டத்தைச் சொல்லும் உணர்ச்சிகரமான படைப்பாக இப்படம் இருக்கும். என் வாழ்நாளில் 21 வருடங்களில் நான் பணிபுரிந்ததில் இவர்தான் சிறந்த இயக்குநர். படப்பிடிப்புக்கு எப்போது கூப்பிடுவார்? என்ற ஆர்வத்தில் இருந்தேன். செட்டுக்குப் போவதைவிட, நடிப்பதைவிட, நான் பிரசாந்துடன் நேரத்தை செலவிட விரும்பினேன்" என்றார்.

Branhas

மேலும், "நான் சிறப்பாக எதுவும் செய்யவில்லை; கதாபாத்திரம் ஃபிட்டாக இருக்கவேண்டும் என நீல் பிரசாந்த் விரும்பினார், அதற்கேற்ப என்னை மாற்றிக்கொண்டேன். இது எனக்கு பொதுவான விஷயம்தான்" என்றார்.

2 நண்பர்களுக்கு இடையிலான பிணைப்பை மையமாக வைத்து, இந்த திரைப்படத்தின் கதைக்களம் உருவாகியிருப்பதாக சொல்லப்படுகின்றது, இந்த திரைப்படம் சலார் பார்ட் 1 சி 2 இந்த திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 55 நிமிடங்களாகவுள்ளது. ரத்தம் தெளிக்கும் வன்முறை மிகுந்த அதிரடி ஆக்சன் காட்சிகள் கொண்ட இந்த திரைப்படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது.