பிக்பாஸ் லாஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய பிரபல இளம்நடிகர்.! யார், ஏன் தெரியுமா??
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் அனைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செய்துள்ளது பிக்பாஸ் குழு.

மேலும் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3ல் 15 போட்டியாளர்களுள் ஒருவராக இலங்கையை சேர்ந்த பிரபல செய்திவாசிப்பாளரான லாஸ்லியா கலந்துகொண்டுள்ளார். மேலும் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு நாளிலேயே அவரது பந்தா இல்லாத பேச்சிற்கும், மற்றவர்களை பற்றி புறம் பேசாத குணத்திற்கும் லாஸ்லியாவிற்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். மேலும் லாஸ்லியா ஆர்மியும் உருவானது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ளாஸ்மியா கேமிரா முன்பு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா பாடலை பாடியுள்ளார். இது ரசிகர்களால் பெருமளவில் வரவேற்கப்பட்டது.

இந்நிலையில் இது வைரலான நிலையில் இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் படத்தின் நாயகன் ஹாரிஸ் கல்யாண் இதனை வரவேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.
அதில் லாஸ்லியா இதயங்களை வெல்கிறார். பிக்பாஸ் வீட்டிலிருந்து கண்ணம்மா பாடலை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.இந்த வீடியோவை எடிட் செய்ததற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
#Losliya is winning hearts !! Happy to hear #Kannamma song from the #BiggBoss house ! Thanks for this edit 😃👏 https://t.co/gwP7yevJfe
— Harish kalyan (@iamharishkalyan) June 27, 2019