பிரபல நடிகருடன் நெருக்கம்! பழைய காதலரை கழட்டிவிட்டாரா நடிகை பிரியா பவானி சங்கர்? குழப்பத்தில் ரசிகர்கள்!

பிரபல நடிகருடன் நெருக்கம்! பழைய காதலரை கழட்டிவிட்டாரா நடிகை பிரியா பவானி சங்கர்? குழப்பத்தில் ரசிகர்கள்!


harish-kalyan-tweet-for-priya-bavani-shankar

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். 

பின்னர்  ஹரீஸ் கல்யாண்  பியார் பிரேமா காதல்,  இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் மற்றும் சமீபத்தில் வெளிவந்த தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது ஹரிஷ் கல்யாண் பிரியா பவானி சங்கருடன் இணைந்து, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற பெல்லி சூப்புலு  என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஹரிஷ் கல்யாண், நடிகை பிரியா பவானி சங்கருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இறுதியாக எங்களுக்குள் மகிழ்ச்சி என்று பதிவிட்டு அதனுடன் இரு ஹார்ட்டின் சிம்பலையும் பதிவிட்டிருந்தார். அதற்கு ப்ரியா பவானி சங்கர், லாக்டவுன் முடியும் வரை காத்திருக்க முடியாதா? நான்தான் இதனை முதலில் அனைவருக்கும் சொல்லவேண்டும் என விரும்பினேன் என குறிப்பிட்டுள்ளார். 

அதனைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண், என்னால் காத்திருக்க முடியாது. காத்திருக்க மாட்டேன். நான் இதனை அதிகாரப்பூர்வமாக்குகிறேன். நாளை மாலை 5 மணிக்கு என  பதிலளித்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கருக்கிடையே காதலா? ப்ரியா பவானி சங்கர் பழைய காதலனை கழட்டிவிட்டுட்டாரா?  என கேள்வி எழுப்பி வருகின்றனர்.மேலும் சிலர் இது கண்டிப்பாக ஏதாவது ஒருபடத்தின் புரமோஷனுக்காக இருக்கும் என கூறிவருகின்றனர்.