பெரிய மனசுடன் சாக்லேட் பாய் ஹரிஷ் கல்யாண் செய்த நெகிழ்ச்சி காரியம்! குவியும் பாராட்டுக்கள்!

பெரிய மனசுடன் சாக்லேட் பாய் ஹரிஷ் கல்யாண் செய்த நெகிழ்ச்சி காரியம்! குவியும் பாராட்டுக்கள்!


harish-kalyan-donate-amount-for-cancer-institute

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். 

பின்னர் சாக்லேட் பாயாக வலம் வந்த ஹரீஸ் கல்யாண்  பியார் பிரேமா காதல்,  இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் மற்றும் சமீபத்தில் வெளிவந்த தாராள பிரபு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கை விடப்பட்டவர்களுக்கு உதவும்வகையில் தற்போது ஹரிஷ் கல்யாண் ஸ்ரீமாதா புற்றுநோய் மருத்துவமனை நிறுவனத்தை சேர்ந்த விஜயஸ்ரீயிடம் ரூ 3,70,000 நன்கொடையாக கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கை விடப்பட்டவர்களை இறுதி நிமிடங்கள் வரை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும் ஸ்ரீமாதா புற்று நோய் மருத்துவமனை நிறுவனத்தின் விஜயஸ்ரீ அவர்களுக்கு பாராட்டுக்கள். அவரின் 8 ஆண்டுகால சேவைக்கு என் சிறிய பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது என பதிவிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.