13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
"மிக்ஜாம் புயல்! கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இழந்த பிரபல இசையமைப்பாளர்!"
மிக்ஜாம் புயலால் சென்னை முழுக்க வெள்ளக்காடாக மாறியுள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி, பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் இன்னும் நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் திரைப் பிரபலங்களும் இந்தப் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீடு கூட வெள்ளநீரால் சூழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அந்தவகையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வீடும் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளதாகவும், அவரது வீட்டிலுள்ள யாரும் வெளியே வர முடியாமல் தவிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவரது வீட்டிலிருந்து வெள்ளநீரை வெளியேற்றும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அதில் அவரது கார் முழுதாக நீரில் மூழ்கியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் அவரது ஸ்டுடியோவிற்குள்ளும் தண்ணீர் புகுந்து பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.