திருவள்ளுவராக அவதாரம் எடுத்த பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்! தீயாய் பரவும் புகைப்படம்!

திருவள்ளுவராக அவதாரம் எடுத்த பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்! தீயாய் பரவும் புகைப்படம்!


Harbajan singh in thiruvalluvar getup

இந்திய கிரிக்கெட் அணியின், சுழற்பந்து வீச்சாளராக ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஹர்பஜன் சிங். சென்னை அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதை தொடர்ந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து அவர் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் தான் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழிலேயே பேச முயற்சித்துள்ளார். மேலும் டுவிட்டரிலும் தமிழிலே பதிவுகளை வெளியிட்டு வந்தார். 

harbajan singh

அதைத் தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்ட அவர் 
டிக்கிலோனா திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானார்.  அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் லாஸ்லியாவுடன் இணைந்து ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ஹர்பஜன் சிங், யூடியூப் சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக உள்ள திருவள்ளுவர் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற தொடரில் திருவள்ளுவராக நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது ஹர்பஜன் சிங் திருவள்ளுவர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.