என்ன கொடுமை சார் இது? நயன்தாரா கெட்டப்பில் திணறடிக்கும் பிரபல டிவி நடிகை! புகைப்படம் இதோ!!

என்ன கொடுமை சார் இது? நயன்தாரா கெட்டப்பில் திணறடிக்கும் பிரபல டிவி நடிகை! புகைப்படம் இதோ!!Harathi dressed like nayanthara photo viral

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 

இருவருக்கும் மகாபலிபுரத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. நயன்தாரா திருமணத்தில் சிவப்பு நிற எம்பிராய்டரி சேலை அணிந்திருந்தார். அதில் கர்நாடக கோவில்களில் இடம்பெற்றுள்ள கலை வடிவங்கள் எம்பிராய்டு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. மேலும் அவர் வைடூரியம், வைரம் மற்றும் மரகத கற்களால் ஆன நகைகளை அணிந்திருந்தார்.

இந்நிலையில் நகைச்சுவை நடிகை ஆர்த்தி கணேஷ், நயன்தாராவின் திருமண கோலத்தை போலவே சிவப்பு நிற எம்பிராய்டரி சேலை, ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட், நகைகள் போன்று அணிந்து புதிய கெட்டப்பில் திணறடித்துள்ளார். அதனை அவர் எக்ஸ்பெக்டேஷன் அன்ட் ரியாலிட்டி... என்ன கொடுமை சார் இது? என நகைச்சுவையாக கேப்ஷன் கொடுத்து பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.