சினிமா

அடேங்கப்பா! எவ்ளோ பெரிய மனசு! நடுரோட்டில் நடிகை ஹன்சிகா செய்த காரியத்தை பார்த்தீர்களா! தீயாய் பரவும் வீடியோ!

Summary:

நடிகை ஹன்சிகா, தெருநாய்களுக்கு உணவளித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. அதனை  தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் அடுத்ததாக எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார்.

கொழுகொழுவென பப்ளியாக இருந்த இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். மேலும் இவரை ரசிகர்கள் சின்ன குஷ்பு என செல்லமாக அழைத்தனர். நடிகை ஹன்சிகா  இறுதியாக தனது 50வது படமான மஹாவில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. பெரும்பாலான ஹீரோயின்களுக்கு நாய்க்குட்டி என்றால் மிகவும் பிடிக்கும். பலவகையான விலையுயர்ந்த நாய்க்குட்டிகளை வீட்டில் வளர்த்து அதனுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவர்.

ஒரு சில நடிகைகள் மட்டுமே தெருநாய்கள் மீதும் பாசம் காட்டுவர். இவ்வாறு நடிகை ஹன்சிகா சமீபத்தில் தெருநாய்களுக்கு உணவளித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், கிறிஸ்துமஸ் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. நமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடும்போது தெருக்களில் உள்ள நமது இந்த நண்பர்களை மறந்து விடக்கூடாது. தெரு நாய்களுக்கு உணவளித்து உதவி செய்வோம் என கூறியுள்ளார். இதனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
 


Advertisement