சினிமா

என்னுடைய அந்தப் படம் வெளிவந்தால் என் லெவலே வேற! ரசிகர்களின் கேள்விக்கு ஆவேசத்தில் ஹன்சிகா அளித்த பதிலை பாருங்கள்.!

Summary:

என்னுடைய அந்தப் படம் வெளிவந்தால் என் லெவலே வேற! ரசிகர்களின் கேள்விக்கு ஆவேசத்தில் ஹன்சிகா அளித்த பதிலை பாருங்கள்.!

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் அடுத்ததாக எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார்.

கொழுகொழுவென பப்ளியாக இருந்த இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். மேலும் இவரை ரசிகர்கள் சின்ன குஷ்பு என செல்லமாக அழைத்தனர். நடிகை ஹன்சிகா  இறுதியாக தனது 50வது படமான மஹாவில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் பலரும் ஹன்சிகா மார்க்கெட்டை இழந்து விட்டார் என கூறி வருகிறார்கள். இதனால் ஆவேசம் அடைந்த ஹன்சிகா, மார்க்கெட் இல்லை என்று யார் சொன்னது, படம் ரிலீஸ் ஆகல அவ்வளவுதான் என கூறியுள்ளார். மேலும் விஜய் ஆண்டனியுடன் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஹன்சிகாவிடம் கேட்ட போது அதற்கு அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

மேலும் ஹன்சிகா மாஸ் ஹீரோக்களுடன் தான் நடிப்பேன் என்றும், என்னுடைய மஹா படம் மட்டும் ரிலீஸ் ஆகட்டும் அப்புறம் என்னுடைய கால்ஷீட்டுக்காக க்யூவில் தான் நிக்கணும் என ஆவேசமான பதிலை கூறியுள்ளாராம்.

 

 


Advertisement