சினிமா

ஜுவாலா கட்டாவுடனான ரகசிய உறவை உறுதி செய்த நடிகர் விஷ்ணு விசால்-இவருக்காகத் தான் உங்கள் மனைவியை விவாகரத்து செய்தீர்களா? என ரசிகர்கள் கேள்வி!

Summary:

guttajwala-vishnu vishal relashionship

வெண்ணிலா கபடி குழு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஷ்ணு விஷால் பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், முண்டாசுப்பட்டி, ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு , ராட்சஷன் உள்ளிட்ட  பல படங்களில் நடித்தார்.
.
இவரும் இவரது காதல் மனைவி ரஜினி நட்ராஜும் கடந்தாண்டு விவாகரத்து செய்துக் கொண்டனர். அதற்கான காரணத்தை சில மாதங்களுக்கு முன்பு ஒரு நேர்க்காணலில் தெரிவித்தார் விஷ்ணு.

ஆன் ஸ்கிரீனில் ரொமான்ஸ் நன்றாக வர வேண்டும் என்பதற்கா தான் நடிகைகளிடம் ஃப்ரெண்ட்லியாக பழகியதை, தன் மனைவி தவறாக எடுத்துக் கொண்டார் என அதில் கூறியிருந்தார்.

தொடர்புடைய படம்

இந்நிலையில், ஓய்வு பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபீக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அவர். இருவரும் நெருக்கமாக இருக்கும் அந்தப் படத்தை ட்விட்டர் பக்கத்தில் முகப்பு ட்வீட்டாகவும் வைத்திருக்கிறார் விஷ்ணு.

இதைப் பார்த்த ரசிகர்கள், இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறீர்களா? என்ற வண்ணம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் சிலரோ, இவருக்காகத் தான் உங்கள் மனைவியை விவாகரத்து செய்தீர்களா என்றும் கேட்டு வருகிறார்கள்.

நடிகர் விஷ்ணு க்கான பட முடிவு

மேலும் , விஷ்ணுவும், ஜுவாலாவும் 6 மாதங்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாகவும் இன்னும் முறைப்படி திருமணம் நிச்சயிக்கப்படவில்லை எனவும் கூறுகிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர்.

இதற்கிடையே விஷ்ணுவை விட மூத்தவரான ஜுவாலா பேட்மிண்டன் வீரர் சேத்தன் ஆனந்தை 2005-ல் மணம் புரிந்து 2011-ல் விவாகரத்தானவர்  என்பது  குறிப்பிடத்தக்கது 


Advertisement