திருமண மேடையில் பளாரென அறைந்த மணமகன்! அடுத்த கணமே மணமகள் செய்த காரியம்! தீயாய் பரவும் ஷாக் வீடியோ!!

திருமண மேடையில் பளாரென அறைந்த மணமகன்! அடுத்த கணமே மணமகள் செய்த காரியம்! தீயாய் பரவும் ஷாக் வீடியோ!!


Groom slap bride in marriage function video viral

தற்காலத்தில் சமூக வலைதளங்களில் வேடிக்கையான மற்றும் வித்தியாசமான பல வீடியோக்கள் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது. மேலும் தற்போது திருமணங்களில் நடக்கும் கலாட்டாக்கள், மோதல்கள் உள்ளிட்ட வீடியோக்களும் பெருமளவில் வைரலாகி வருகிறது. அவற்றில் சில நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. பல அதிர்ச்சியூட்டுகிறது.

இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சியில் மணமகன் மற்றும் மணமகளுக்கு இடையே சண்டை நடப்பது போன்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் மணமகள், மணமகனுக்கு இனிப்புகளை ஊட்டிவிட சென்றுள்ளார். அதனை கண்டுகொள்ளாமல் மணமகன் கேமராவை கவனித்துக் கொண்டு இருந்துள்ளார். இதில் கடுப்பான மணமகள் அந்த இனிப்பை மணமகனின் முகத்தில் தடவியுள்ளார். 

இந்நிலையில் கோபமடைந்த மணமகன் மேடையிலேயே மணமகளை ஓங்கி அறைந்துள்ளார. பின்னர் மணமகளும் சற்றும் தாமதிக்காமல் அடுத்த கணமே மணமகனை பளார் என அறைந்துள்ளார். இவ்வாறு இருவரும் மாற்றி மாற்றி மோதிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது.