முதன்முதலாக விஜய் கொடுத்த மாபெரும் பரிசு.! சொல்லமுடியாத அளவிற்கு சந்தோஷத்தில் மூழ்கிய பிரபலம்!!

முதன்முதலாக விஜய் கொடுத்த மாபெரும் பரிசு.! சொல்லமுடியாத அளவிற்கு சந்தோஷத்தில் மூழ்கிய பிரபலம்!!


gopi prasanna talk about vijay ring gift

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'பிகில்'. இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.பிகில் படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கபெண்ணே பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

gopi prasanna

 மேலும் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நடிகர் விஜய் பிகில் என்று பெயர் எழுதப்பட்ட மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார். இது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

இந்நிலையில் இதுகுறித்து பிகில் படத்தில் பப்ளிசிட்டி டிசைனராக பணியாற்றிய கோபி பிரசன்னா மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் பப்ளிசிட்டி டிசைனராக எனக்கு கிடைத்த முதல் பரிசு, நன்றி விஜய் சார் என உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார்.