நான் செத்துட்டனா?.. தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் போட்டோஸ் எடுத்துக்கொண்ட நடிகர் ஜி.எம்.குமார்..! 

நான் செத்துட்டனா?.. தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் போட்டோஸ் எடுத்துக்கொண்ட நடிகர் ஜி.எம்.குமார்..! 


gm-kumar-twitter-post-gone-viral

தமிழில் காதல் வைரஸ், வெயில், அவன் இவன் உட்பட பல படங்களில் நடித்ததன் மூலமாக பிரபலமடைந்த நடிகர் ஜி.எம்.குமார். இவர் இறந்துவிட்டதாக போஸ்டர் ஒன்று அச்சிடப்பட்டு, அந்த போஸ்டர் முன்பு குமார் நின்றவாறு புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பதிவிட்டார். 

இதனைகண்ட ரசிகர்கள் பலரும் நீங்கள் இறந்துவிட்டதாக யார் போஸ்டர் அடித்தார்கள்? என கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் நகைச்சுவையாக, படத்தின் படப்பிடிப்பில் நான் இறந்ததாக எடுக்கப்பட்ட காட்சிகள் இவை. 

யாரும் பதற்றமடைய வேண்டாம் என கேட்டுகொண்டுள்ளார். மேலும் ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடு தான் வாழ்க்கை என்றும் தெரிவித்துள்ளார். பட குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு பதிவிடப்பட்டாலும் அதனை நகைச்சுவையாக அவர் எடுத்துக்கொண்டு பதிவு செய்துள்ளார்.