அட.. எஸ்ஜே சூர்யாவையே மிஞ்சிடுவார் போல! இணையத்தை கலக்கும் சுட்டிப்பெண்! மில்லியன் பேர் ரசித்த வீடியோ!!

அட.. எஸ்ஜே சூர்யாவையே மிஞ்சிடுவார் போல! இணையத்தை கலக்கும் சுட்டிப்பெண்! மில்லியன் பேர் ரசித்த வீடியோ!!


girl-dancing-for-sj-surya-song

எஸ்.ஜே சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை பட பாடலுக்கு சுட்டி பெண் குழந்தை ஒன்று நடனமாடிய வீடியோ இணையத்தை பெருமளவில் கலக்கி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் எஸ்.ஜே சூர்யா இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இத்திரைப்படத்தில் அவருடன் ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிரட்டலான கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

வித்தியாசமான காமெடி ஹாரர் மற்றும் த்ரில்லர் திரைப்படமான நெஞ்சம் மறப்பதில்லை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற கண்ணுங்களா செல்லங்களா என்ற பாடலும் பெருமளவில் பிரபலமாகியுள்ளது. இப்பாடலை யுவன்சங்கர் ராஜா இசையமைத்து அவரே பாடியுள்ளார்.

அப்பாடல் காவல் நிலையத்தில் எஸ்ஜே சூர்யாவின் வீட்டு வேலையாட்கள் என்னவெல்லாம் பொய் கூறினார்கள் என்பதை கூறி பாடுவது போல் அமைந்திருக்கும். இந்நிலையில் இந்த பாடல் டிவியில் ஒளிபரப்பாக அதனை கண்ட சுட்டி பெண் குழந்தை ஒன்று எஸ்.ஜே சூர்யா எவ்வாறு நடனமாடுகிறாரோ  அதே போல நடனமாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.