
அடஅட.. இப்பவும் அப்படியே இருக்கீங்களே! 18 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த கில்லி ஜோடி!! வைரலாகும் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து சூப்பர் ஹிட்டான திரைப்படங்களில் ஒன்று கில்லி. இன்றும் அப்படம் ரசிகர்களால் பெருமளவில் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. கில்லி படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹீரோயினாக திரிஷா நடித்திருந்தார்.
மேலும் விஜய்யின் அப்பாவாக ஆஷிஷ் வித்யார்த்தி, அம்மாவாக ஜானகி சபேஷ் ஆகியோர் அசத்தலாக நடித்திருந்தனர். செம மாஸ் பிளாக்பஸ்டர் கொடுத்த கில்லி படத்தில் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்து இருந்தார். காதல் கலந்த மிரட்டலான அவரின் நடிப்பு இன்றும் ரசிகர்களால் பெருமளவில் பாராட்டப்படுகிறது.
ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் ஜானகி சபேஷ் இருவரும் தமிழ் மட்டுமன்றி பிற மொழி படங்களிலும் நடித்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் அண்மையில் இருவரும் கடற்கரையில் சந்தித்துள்ளனர். அப்பொழுது மிகவும் மகிழ்ச்சியுடன் இருவரும் எடுத்துக் கொண்ட சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் அப்போது எப்படி இருந்தீர்களோ, அதேபோல இருப்பதாக உற்சாகத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement